சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தில் இருந்து தற்போது சிறப்பான தரமான தகவல் ஒன்று வந்துள்ளது.
சந்திரயான் 3 திட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பின் தனது அடுத்த இலக்காக இஸ்ரோ கையில் எடுத்துதது ‘ஆதித்யா எல்-1’ திட்டம் தான் . சூரியனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 02ம் தேதி பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது .

சூரியனை நோக்கி வெற்றிப்பயணத்தை தொடங்கிய ஆதித்யா எல்-1 தனக்கு கிடைக்கும் ஒவ்வரு தகவலையும் இஸ்ரோவுக்கு அனுப்பி வருகிறது . அந்தவகையில் தற்போது சூரிய அனலில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்கள் குறித்த தகவலை ஆதித்யா எல்-1 இஸ்ரோவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
சூரிய அனலில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல் முறையாக ஆதித்யா எல்1 விண்கலம் படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்ற கருவி இதனை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கிறது .

கடந்த அக்டோபர் 29ம் தேதி பதிவான படத்தை, மக்களுக்கு புரியும்படி கிராப் வடிவில் டிசைன் செய்த இஸ்ரோ அவற்றை தற்போது வெளியிட்டுள்ளது.