தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் டெல்லியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் டெல்லியில் தனது பெற்றோருடன தங்கி அங்குள்ள அழகு நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அவர் வழக்கம் போல இன்றும் பணிக்கு சென்ற நிலையில் அவரது உடல் அழகு நிலையத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
லட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மரணமடைந்துள்ளதாகவும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் லட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அழகு நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.