செ*க்ஸ்-க்கு விளையாட்டு போட்டியா?.. – உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஸ்வீடன்!

உலகிலேயே முதல்முறையாக செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்து, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஸ்வீடன்.

ஸ்வீடன் நாட்டில் கோதன்பர்க் என்கிற இடத்தில் ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி என்ற பெயரில் வருகிற ஜூன் 8 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த விளையாட்டு போட்டி 8 ஆம் தேதி தொடங்கி 6 வாரங்களுக்கு நடைபெறும் என ஸ்வீடிஷ் செக்ஸ் ஃபெடரேஷன் அறிவித்துள்ளது.

இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்வீடிஷ் செக்ஸ் ஃபெடரேஷன் வழிகாட்டுதலின் படி, பாலுறவுக்கு இணங்க வைத்தல், வாய் வழி பாலுறவு உள்ளிட்ட 16 ஒழுங்குமுறைகளோடு இந்த போட்டி நடைபெறும் எனவும், பங்கேற்பாளர்கள் தினமும் 45 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

மேலும் போட்டியை பொறுத்து கால நிர்ணயம் மாறுபடும் என தெரிவித்துள்ள அந்த அமைப்பு, போட்டி ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வரை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும்வகையில் இந்த போட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிக்கு நடுவர்களாக மூன்று நபர்கள் கொண்ட குழு மற்றும் பார்வையாளர்களின் மதிப்பீடுகள் மூலமாகவும் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு விஷயங்களை அடிப்படையாக கருத்தில் கொள்ளப்பட்டு 5 முதல் 10 மதிப்பெண்கள் வரை பங்கேற்பாளர்களுக்கு அளிக்கப்படும் எனவும் ஸ்விடிஷ் செக்ஸ் ஃபெடரேஷன் தெரிவித்துள்ளது. உலகிலேயே உடலுறவுக்காக ஒரு போட்டியே நடத்தும் முதல் நாடாக ஸ்வீடன் வரலாற்றில் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Total
0
Shares
Related Posts