டி20 உலக கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை , அறிமுக அணியான ( usa vs pak ) அமெரிக்கா அணி வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது .
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் சுமார் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன .
இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் அறிமுக அணியான அமெரிக்கா அணிகள் மோதின .
Also Read : விடிய விடிய பெய்த கனமழை – சென்னையில் 35 விமானங்களின் சேவை பாதிப்பு..!!
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து அமெரிக்கா அணிக்கு எதிராக கடினமான இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் அணியின் சில நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் .சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் , ஷதாப் கான் அணிக்கு தேவையான ரன்களை சேர்க்க கடைசியில் இப்திகார் அகமது , ஷாஹீன் அப்ரிடி அதிரடியாக ரன்கள குவித்தனர்
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இல்லாத பாகிஸ்தான் அணி 159 ரன்கள் சேர்த்தது . இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்கா அணி பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிறப்பாக கையாண்ட அமெரிக்க அணி ஆட்டத்தை சமனில் முடித்து.
இதையடுத்து இரு அணிகளும் சூப்பர் ஓவரில் விளையாடியது . இதில் முதலில் களமிறங்கிய அமெரிக்கா 18 ரன்களை எடுத்தது.
பின்னர் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் ( usa vs pak ) அணியால் 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது இதன் காரணமாக 5 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணி வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.