என் மீது அவதூறுகளை வீசினால் பொறுத்துக்கொள்வேன். ஆனால், நாட்டு மக்களை அவமதிக்கும் வகையில் பேசினால் ( modi angry ) ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது :
தோலின் நிறத்தின் அடிப்படையில் ஒருவரின் தகுதியை நாம் தீர்மானிக்க முடியுமா? என் மக்களை இப்படிக் கேவலமாகப் பார்க்க, இளவரசரை அனுமதித்தது யார்? பழங்குடியினப் பெண்ணான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைப் பற்றி நான் நிறைய யோசித்திருக்கிறேன். அவரை குடியரசுத் தலைவர் தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸ் ஏன் அவ்வளவு முயற்சி செய்தது? இன்றுதான் அதற்கான காரணம் தெரிந்து கொண்டேன்.
Also Read : தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்த பழனிசாமி, அடிவயிறெரிய அறிக்கை விடலாமா? – ஆர்.எஸ். பாரதி
இளவரசரின் (ராகுல்) தத்துவ வழிகாட்டியான அங்கிள் ஒருவர் அமெரிக்காவில் இருக்கிறார். கிரிக்கெட்டில் மூன்றாவது நடுவரைப் போலவே அமெரிக்காவில் இருக்கும் அந்த தத்துவ வழிகாட்டி மாமாவின் கருத்தைத்தான் இளவரசரும் ஏற்றுச் செயல்படுத்துகிறார். அவர்தான் இப்போது, கறுப்பு தோல் கொண்டவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்’ ( modi angry ) எனக் கூறி இருக்கிறார். இதைத்தான் அப்போதும் காங்கிரஸ் பிரதிபலித்திருக்கிறது” என பிரதமர் மோடி பேசியுள்ளார்