கொரோனா பரவல் காரணமாக 23 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாடு- கேரளா போக்குவரத்து தொடங்கியது.
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசிகளும் முழுவீச்சில் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொரோனா பரவல் குறைவடைந்தததை அடுத்து கட்டுப்பாடுகளில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் வரிசையில் போக்குவரத்து சேவைகளும் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தபட்டிருந்த தமிழ்நாடு- கேரளா இடையிலான போக்கு வரத்து 23 மாதங்களுக்கு பிறகு போக்குவரத்து இன்று தொடங்கியது.
அதன்படி கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 10 தமிழக அரசு பேருந்துகள் பாலக்காட்டிற்கு இயக்கப்படுகிறது. அதே போல் பாலக்காட்டிலிருந்து கோவைக்கு 10 கேரளா மாநில பேருந்துகளும் இயக்கப்படுகிறது.