நடிகர் விஜயின் நடிப்பில் தற்போது வாரிசு ( varisu )திரைப்படம் உருவாகி வருகிறது.இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து சரத்குமார்,பிரகாஷ்ராஜ்,யோகிபாபு, ஷாம்,குஷ்பூ,சங்கீதா என பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கும் சங்கீதா ஜீ-தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வாரிசு படம் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியது .தளபதி விஜய் பல வருடங்கள் கழித்து இப்படி ஒரு படத்தில் நடிக்கிறார்.வாரிசு திரைப்படம் கண்டிப்பாக சிறப்பான ஃபேமிலி என்டர்டைனராக இருக்கும் அது மட்டுமின்றி நல்ல மெசேஜ் கூட படத்தில் இருக்கிறது குடும்பமாக இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம் என்று கூறியுள்ளார்’.
ரசிகர்கள் மத்தியில் வாரிசு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகுந்த அளவில் உள்ளது வாரிசு திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் வெளியாக உள்ளது.இந்த திரைப்படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நவம்பர் 5 வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகிவுள்ளது.இந்த பாடலுக்கான ப்ரோமோ இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.
இதேபோன்று இந்த திரைப்படத்தில் ரஞ்சிதமே என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் பலரை கவர்ந்து வருகிறது.மேலும் இந்த திரைப்படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுக்காக தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.