ஆதி லட்சுமி அருகில் வருக!
ஜோதி சந்தான லட்சுமி வருக!
கஜ லட்சுமியே கனிந்து வருக!
விஜய லட்சுமி விரைந்து வருக!
தன லட்சுமியே தானும் வருக!
தான்ய லட்சுமித் தாயே வருக!
மகா லட்சுமியே மகிழ்வுடன் வருக!
புகழ்தரும் வீர லட்சுமியே வருக!
கஷ்டம் விலகிக் கனதனம் கொழிக்க
அஷ்ட லட்சுமியே அடியெடுத்து வைக்க!
மேலும் இந்த துதியை சொல்லி சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை கொண்டு தானம் வழங்கலாம்.
கடைபிடிக்க வேண்டிய வழிமுறை:
- தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
- பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்?பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான்.கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
- செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
- சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்
- காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
- தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு
- விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.
- மேலும் சந்திரனை சந்திக்கும் அமாவாசை நாளில் லக்ஷ்மியை ஆராதனை செய்தால் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.