இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘பத்து தல’ படம் வெளியானது. இதில், பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி, மலையாள நடிகை அனு சித்தாரா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தொடர்ந்து கே.ஈ.ஞானவேல் ராஜா ஸ்டூடியோ கிரீன் சார்பில், பத்து தல படத்தை (pathu thala movie) தயாரித்து உள்ளார்.இந்நிலையில், நேற்று இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் சிம்புவின் பத்து தல படம் படத்தை பார்க்க வந்த நரிகுறவர்களை (narikurava) திரையரங்கு ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காத வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு ஜி.வி.பிரகாஷ், விஜய் சேதுபதி, வெற்றிமாறன், கமல்ஹாசன், நடிகர் சூரி உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனையெடுத்து நேற்று வெளியான சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம், முதல் நாளில் ₹12.3 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்புவெளியீட்டு உள்ளது, மேலும் சிம்புவின் திரைப்படங்களில் இதுவே முதல் நாளின் அதிக வசூல் என தயாரிப்பு நிறுவனம் தெரிவிதுள்ளது.
மேலும், படம் தற்போது 450 திரையரங்குகளில் 650 ஸ்கிரீன்களில் படம் திரையிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பத்து தல படம் தமிழ்நாட்டில் மொத்தம் ரூ. 7 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.