சென்னை அடுத்த செங்கல்பட்டு செம்மஞ்சேரியில் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு புதிய அறிவிப்பிகளை வெளியிட்டு வருவதோடு மட்டும் இன்றி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில திட்டங்களில் புதிய மாற்றங்களை செய்து அதனை செயல்படுத்தி வருகிறது..
இந்த நிலையில் சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் வெள்ள அபாயம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை தடுக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பிட்டில் வெள்ள தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் ஆய்வு செய்த முதல்வர் நூக்கம்பாளையம் மேம்பாலம், அரசன் கழனி ஏரி உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு நடத்தினார். மதுரப்பாக்கம் ஓடை, தெற்கு டிஎல்எப் இடங்களில் நடக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு, சு. முத்துசாமி மற்றும் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.