தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் இரத்ததானம் வழங்கி இரத்ததான முகாமை( blood donation) துவக்கி வைத்தார்.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விழுப்புரம் சட்டமன்ற திமுக உறுப்பினர் டாக்டர் ஆர். லட்சுமணன் ஏற்பாட்டின் பேரில் அவரது தலைமையில் மாபெரும் ரத்ததான முகாம் (blood donation) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல் ஆளாக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் ரத்ததானம் வழங்கி ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இந்த ரத்ததான முகாமில் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.
இதனை தொடர்ந்து விழுப்புரம் நகரம் , கோலியனூர் ஒன்றியம், கண்டமங்கலம் ஒன்றியம், கானை ஒன்றியம், வளவனூர் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.