ஜி 20 உச்சி மாநாட்டில் குடியரசு தலைவர் வழங்கிய இரவு பேருந்தில் அமெரிக்க அதிபர் ஜோதினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
18வது ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஜி20 மாநாட்டில் அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட 20 நாடுகளுக்கும் மேற்பட்ட தலைவா்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் உலக தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இரவு சிறப்பு விருந்தளித்தார்.
இந்த விருந்திற்க்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கபட்டு இருந்த நிலையில்,இதனை ஏற்று தமிilநாடு முதலமைச்சர் முகஸ்டாலின்,மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் விருந்தில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய தலைவர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கிய இரவு விருந்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதலமைச்சரை சந்தித்து பேசினார்.இது தொடர்பான புகைபடம் இணையத்தில் வைரலாகி வருகிறது