Tamil Nadu Congress Committee condoles| விக்கிரவாண்டி MLA புகழேந்தி மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இரங்கல் தெரிவித்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார். 71 வயதான அவர் கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதன் பின் 2021ல், நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.ஆவானார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கல்லிரல் பாதிப்பு இருந்ததாக தெரிவித்தனர். இதற்காக சென்னையில் உள்ள , 10 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள ரேலா என்னும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஏப்ரல் 5-ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளையும் கவனித்து வந்தார்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ காலமானார்முதலமைச்சரின் பிரசாரத்தில் பங்கேற்றவர் மரணம்
நேற்று முதல்வர் வருவதற்கு முன்பாக பொதுக்கூட்ட மேடையின் அருகே அமைக்கப்பட்ட ஓய்வெடுக்கும் அறையில் அமர்ந்திருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு புகழேந்தி கீழே விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் எம்.எல்.ஏ. புகழேந்தியை விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிரி சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இரங்கல் தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செலவபெருந்தொகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”
விழுப்புரம் தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான திரு.என்.புகழேந்தி அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
அவர் எங்களுடன் சட்டப்பேரவை கூட்டங்களில் கலந்து கொண்டதையும், அவருடன் பழகிய காலங்களையும் எண்ணி பார்க்கிறேன். அவரது பேச்சுகளும், மக்கள் சேவைகளும் இன்றும் எனது நினைவில் நீங்கா இடம் பெற்று நிற்கின்றன.
திரு. என். புகழேந்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்ற கழக தலைவர் மற்றும் தி.மு.க. நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் வேதனையோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.