திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு(DR Balu )தொடர்ந்த அவதூறு வழக்கில் அண்ணாமலை அடுத்த மாதம் 14-ம் தேதி ஆஜராக வேண்டும் என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அண்ணாமலை(annamalai), திமுக முக்கிய தலைவர்களின் dmk files சொத்துப் பட்டியல் என்ற பெயரில் வெளியிட்டார். அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,உதயநிதி,கனிமொழி உள்ளிட்ட திமுக தலைவர்களின் சொத்து மதிப்பு வெளியிடபட்டது.
இந்த நிலையில் திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் , அண்ணாமலைக்கு(annamalai) எதிராக வழக்கு தொடர்ந்தார். தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை வைப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்த மாதம்14ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
மின்சார துறைஅமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யபட்டுள்ள நிலையில்,அண்ணாமலையின் இந்த வழக்கு முக்கியதுவம் வாய்ததாக கருதப்பட்டுள்ளது.