தனது கணவன் மீது முன்னாள் மாணவியை தூண்டிவிட்டு பொய் புகாரை அளித்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் மனைவி புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி சென் ருக்மணிதேவிவரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் பலருக்கும் அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து,கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பணிபுரியும் நடன துணைப் பேராசிரியர் ஹரிபத்மன், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநாத் ஆகிய நான்கு ஆசிரியர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 4 பேர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம்,உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து முன்னாள் மாணவர் அளித்த புகாரின் பேரில், மார்ச் 31 வெள்ளிக்கிழமை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஹரிபத்மன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மனின் மனைவி திவ்யா,தனது கணவருடன் பணியாற்றிய 2 பெண் பேராசிரியர்களின் தூண்டுதலின்பேரிலேயே முன்னாள் மாணவி இந்த குற்றச்சாட்டை அளித்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அனைவரது முன்னிலையிலும் மூத்த பேராசிரியர் ஜனார்த்தனன், தனது கணவரை பாராட்டியதாகவும், அதனால் 2 பெண் பேராசிரியர்களும் பொறாமையில், முன்னாள் மாணவியை தூண்டிவிட்டு பொய் புகாரை அளித்துள்ளாகவும் குற்றஞ்சாட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் பெண் அதிகாரி தலைமையில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.