தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு கூட்டுறவு பொங்கல் தொகுப்பை கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு “கூட்டுறவு பொங்கல்” என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்க மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும். அரிசி, சர்க்கரை, கரும்பு, பொங்கலுக்கு தேவையான பொருள்களுடன் 1000 ரூபாய் ரொக்கமும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
Also Read : இளம் வயதில் வரலாறு படைத்த செஸ் வீரர் குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசு அறிவித்த முதலமைச்சர்..!!
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விரைவில் அது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் கூட்டுறவுத் துறை சார்பில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் பொங்கல் தொகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி இனிப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.199/-க்கும், சிறப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.499/-க்கும் மற்றும் பெரும் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.999/-க்கும் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.