Ponmudi case பொன்முடிக்கு இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
மீண்டும்பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்படயுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி பொன்முடிக்கு 3ஆண்டுகள் சிறைதண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
இதனால் சிறைத் தண்டனை பெற்ற பொன்முடியின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டு, அவர் வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை நிறுத்தி வைத்தது.
இதனால் பொன்முடியின் தகுதி நீக்கம் ரத்தாகி திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏவானார். திருக்கோவிலூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொன்முடியை மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார். ஆனால், ஆளுநர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் .
இந்த நிலையில், திருக்கோவிலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்முடிக்குPonmudi case , ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அமர்வில் நேற்று 21-03-24 (வியாழக்கிழமை) அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பின்னரும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன் என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
Also Read : BREAKING அமைச்சராக பதவியேற்கிறார் பொன்முடி
நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப்பிரமாணம் செய்ய முடியாது எனக் கூறமுடியும் என்றும் கடுமை காட்டியவர், ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தான் என்ன செய்கிறோம் என்று அவருக்கு தெரியாதா என்றும் சரமாரியாக கேள்வியெழுப்பியது மட்டுமில்லாமல்
இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அளிக்க இன்று வரை கெடு விதித்து எச்சரித்திருந்தார்.இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று பொன்முடிக்கு இன்று மாலை 3.30 மணிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க சம்மதித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பொன்முடிக்குPonmudi case மீண்டும் உயர்கல்வித் துறை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.