Magalir Urimai Thogai –குஷ்புவுக்கு எதிராக திமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் தன்னிடம் காட்ட வேண்டாம் என அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை செங்குன்றத்தில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரும்,தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: தமிழக அமைச்சர் மீது டெல்லி போலீசார் வழக்கு..!- திகைப்பில் திமுக
அப்போது பேசிய குஷ்பூ தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சைப் போட்டால் திமுக-வுக்கு அவர்கள் வாக்களிப்பார்களா?” என பேசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பொதுமக்கள் மற்றும் திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நடிகை குஷ்புவின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது.இந்த நிலையில்,நாமக்கல், திருச்செங்கோடு சிவகங்கை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் குஷ்புவை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும் குஷ்புவின் உருவ பொம்மை மற்றும் குஷ்பு படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது மகளிர் உரிமைத் தொகையை (Magalir Urimai Thogai) கொச்சைப்படுத்திய குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: JustNow | கூட்டணி பேசுவார்த்தை: இ.பி.எஸ் ஆலோசனை!
இந்த சூழலில் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் இதுபோன்ற பூச்சாண்டி வேலை எல்லாம் தன்னிடம் காட்ட வேண்டாம் எனக் கூறிmaயுள்ளார். தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
தான் பேசியதை தவறான அர்த்தம் எடுத்துக்கொண்டு அதை மட்டும் மக்களிடம் எடுத்துக் காட்டி, அவர்களை திசைதிருப்பும் வேலையை திமுகவினர் செய்வதாகவும் எந்தெந்த வகையில் மக்களை ஏமாற்றுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் எனக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்டு விளக்கமளித்துள்ளார்.