தேர்தல் விதிகளை மீறி ஆரத்திக்குப் பணம் கொடுத்ததாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் O. Panneerselvam violation மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரை வரவேற்று பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அப்படி ஆரத்தி எடுத்த பெண் ஒருவருக்கு ஓ.பன்னீர்செல்வம் 2ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார். 500 ரூபாய் தாள்கள் நான்கினை அவர், பெண்ணுக்கு வழங்கும் வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: என்னடா இது ஓ.பி.எஸ்சுக்கு வந்த சோதனை!
தேர்தல் நடத்தை விதிகளின்படி வேட்பாளர் யாருக்கும் பணம் தரக்கூடாது. ஆனால் அதனை மீறி ஓ.பன்னீர்செல்வம், பணம் வழங்கியதாக O. Panneerselvam violationஅவர் மீது தேர்தல் கண்காணிப்பு அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கோவை பா.ஜக வேட்பாளர் அண்ணாமலை ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் அளித்ததாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும், அண்ணாமலை தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறிவிட்டதாக புகார் கிளப்பினர். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரான கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியின்கவனத்துக்கு சென்ற நிலையில், அவர் விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
விசாரணை நடந்து முடிந்த நிலையில், ‛‛போலீஸ் விசாரணையின் அடிப்படையில் இந்த வீடியோ 2023 ஜூலை மாதம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இது தேர்தல் விதிமீறலின் கீழ் வராது. இந்த தவறான விஷயத்தை பரப்பியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகார் போலீசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது” என இதுதொடர்பாக கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தனது எக்ஸ் பக்கத்தில், தெரிவித்துள்ளார்.