வெப்ப அலை எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் ORS பாக்கெட்கள் வழங்கும் “Rehydration Points” அமைக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மார்ச் மாதம் தொடங்கிய மாதத்தில் இருந்து வெளியின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது.
இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். பொதுவாக மே மாதம் முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும். அக்னி நட்சத்திரத்தின்போது வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். அதாவது 40 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
இந்த காலகட்டத்தில் தான் வெப்ப அலை வீசும். ஆனால் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் ஏப்ரல் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3வது இடம் பிடித்திருந்தது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மே 1 வரை தமிழகத்தில்.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
இந்த நிலையில் வெப்ப அலை எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் ORS பாக்கெட்கள் வழங்கும் “Rehydration Points” அமைக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில், “ சுகாதார மையங்களில் வெப்பம் தொடர்பான பாதிப்புகளில் இருந்து மக்களை தற்காத்துக்கொள்ள ஓ.ஆர்.எஸ் (ORS) தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இதுகுறித்து, மாவட்ட சுகாதார அலுவலர்கள், ‘ரீஹைட்ரேஷன் பாயின்ட்’களை ஏற்பாடு செய்யும் உள்ளாட்சி அமைப்புகளை ஒருங்கிணைத்து, பொது பயனாளிகளுக்கு ஓஆர்எஸ் வழங்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இந்த ரீஹைட்ரேஷன் புள்ளிகளில், ஒரு முகாமுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையிலான ORS பாக்கெட்டுகள் வெப்ப அலை காலம் முழுவதும் அந்தந்த ரீஹைட்ரேஷன் புள்ளிகளில் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த DHO களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ரீஹைட்ரேஷன் புள்ளிகளின் இருப்பிடம் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் இறுதி செய்யப்படும்.
ORS கரைசலுடன் கிடைப்பதை உறுதி செய்ய தொகுதி மருத்துவ அலுவலர் மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்துதல் மற்றும் காலியாகிவிட்டால் நிரப்புதல். பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துவதற்கான தரம் மற்றும் பாதுகாப்பை உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டும்.
மேலும், அந்தந்த மாவட்ட TNMSC கிடங்கில் ORS இருப்பு இருப்பதைக் கண்காணிக்கவும், தேவைப்படும்போது ORS பாக்கெட்டுகளை சரியான நேரத்தில் அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.