மக்களுக்கு சம்மந்தமில்லாத பதவியில் இருப்பவர்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக அரசு பெறுபேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் ஆட்சி நிறைவு பெற்றதையடுத்து சென்னை கலைவாணர் அரங்கில் நடைபேறும் “ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டே சாட்சி”என்ற விழா தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின்,கலந்துகொண்டு புகைப்பட கண்காட்சியை சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
பின்னர் பேசிய அவர், அரசு நிர்வாகம், விழாக்களை நடத்துவது, அரசு என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதற்கு தான்.விளிம்பு நிலையில் இருப்பவர்களின் காயங்களுக்கு மருந்து தடவுவதே சிறந்த நிர்வாகம் ஆகும்.
திராவிட மாடல் என்றால் என்ன என கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்ல போவதில்லை, மக்கள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சிதான் பதில், எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் என்றும்,சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு திராவிட மாடல் என்றால் புரியாது, மக்களுக்கு சம்பந்தமில்லாத பொறுப்பில் உள்ளவர்களுக்கு திராவிட மாடல் என்றால் தெரியாது என தெரிவித்துள்ளார்.
இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாளில் முதலமைச்சர் பொறுப்பில், தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுச் செல்ல முழுமையாக அர்பணித்துக் கொண்டேன்,என் மனதிற்கு தெம்பும் தைரியமும் கொடுத்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் தான்.
மேலும் மக்களுக்கு பணியாற்றுவது எனக்கு புதிதல்ல, சிறுவனாக இருந்துபோதே திராவிட இயக்கத்திற்கு என்னை ஒப்படைத்துக் கொண்டேன் .தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்கும் தான் நான் முதலமைச்சர்; அவர்களுக்காக ஓய்வின்றி என் சக்திக்கும் மீறி பணியாற்றி வருகிறேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.