சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக காய்கறி விலையில் பெரிய அளவு மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த மூன்று தினங்களுக்கு முன் உருவான மிக்ஜான் புயல் மற்றும் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்செய்யப்பட்டுள்ளது.இதனால், கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து கணிசமாக குறைந்தது. வரத்து குறைவால், காய்கறிகளின் விலை கிடுகிடுவென விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து உள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று (07.12.2023) காய்கறிகளின் விலை நிலவரம்:
வெங்காயம்(1 கிலோ): 55
தக்காளி(1 கிலோ): 32
உருளை (1 கிலோ) :32
சின்ன வெங்காயம்(1 கிலோ): 110
ஊட்டி கேரட்(1 கிலோ): 35
பெங்களூர் கேரட்(1 கிலோ): 20
பீன்ஸ்(1 கிலோ): 60
ஊட்டி பீட்ரூட்(1 கிலோ): 40
கர்நாடக பீட்ரூட்(1 கிலோ): 25
சவ் சவ்(1 கிலோ): 15
முள்ளங்கி (1 கிலோ): 40
முட்டை கோஸ்: 10
வெண்டைக்காய் (1 கிலோ): 45
உஜாலா கத்திரிக்காய் (1 கிலோ): 40
வரி கத்திரி (1 கிலோ): 35
காராமணி (1 கிலோ): 40
பாகற்காய் (1 கிலோ): 30
புடலங்காய் (1 கிலோ): 40
சுரைக்காய் (1 கிலோ): 35
சேனைக்கிழங்கு (1 கிலோ): 45
முருங்கைக்காய்(1 கிலோ): 80
சேமக்கிழங்கு (1 கிலோ): 30
காலிபிளவர்: 25
வெள்ளரிக்காய் (1 கிலோ): 20
பச்சை மிளகாய்(1 கிலோ): 40/30
பட்டாணி (1 கிலோ): 40
இஞ்சி (1 கிலோ): 90
பூண்டு (1 கிலோ): 180
அவரைக்காய் (1 கிலோ): 50
மஞ்சள் பூசணி(1 கிலோ): 10
வெள்ளை பூசணி (1 கிலோ): 10
பீர்க்கங்காய்( 1 கிலோ): 40
எலுமிச்சை (1 கிலோ): 60
விளம்பரம்
கோவைக்காய் (1 கிலோ): 45
கொத்தவரங்காய் (1 கிலோ): 40
வாழைக்காய்: 7
குடைமிளகாய் (1 கிலோ): 60
வண்ண குடமிளகாய் 80
மாங்காய் (1 கிலோ): 65