இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராமநாதபுரம் மாவட்டம் சென்றார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராமநாதபுரம் மாவட்டம் சென்றுள்ளார்.அங்கு மண்டபத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், மாணவ மாணவர்கள் மொபைல் நேரத்தை கழிப்பதை தவிர்த்து பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் நமது நாட்டில் விளையாட்டில் சாதித்தால் வாழ்வில் ஒளிரலாம். தொடர்ந்து பேசிய அவர் விளையாட்டிற்க்காக பல்வேறு செயல்பாடுகளை நமது அரசு செய்து வருவதாகவும்,மாணவர்கள் மனதை ஒருமுகபடுத்த யோகாசனம் செய்யுங்கள் என தெரிவித்தார்.
இந்த நிலையில் மாணவர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘நான் வகிக்கும் பதவியில் எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது நான் வேலையில் இருந்து விலகிவிடுவேன்’ என கூறினார்.
முன்னதாக,சிபிஐ, மார்க்சிஸ்ட், காங்கிரஸ், மதிமுக. விசிக உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ராமநாதபுரம் மாவட்டம் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
நாளை இமானுவேல் சேகரனார் மற்றும் முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களில் ஆளுநர் அஞ்சலி செலுத்துகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.