விழுப்புரம் மாவட்டம் கீழ்விசிறி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், பிரம்மதேசத்தில் செயல்படும் மதுக்கடையை மூட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கீழ்விசிறி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து, மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க : தொடர் விடுமுறை : பல மடங்கு உயர்ந்தது விமான கட்டணம்!!
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது..
“தமிழ் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகிவிட்டது. தமிழ்நாட்டில் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் மதுவுக்கு அடிமையாகி சீரழிந்து வருகிறார்கள்.
இதனால், படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து, மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். நாம் சுதந்திரம் கிடைத்து 78 ஆண்டுகள் ஆன பின்னரும் மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை.
மக்களுக்கு தரமான கல்வி, குடிநீர், வேலை, வீடு, சுகாதாரம் கிடைப்பதே உண்மையான சுதந்திரம்.” என்று கூறினார்.