திருவள்ளூரில் மாவட்டச் செயலாளர் முன்னிலையில் திமுக கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கிழக்கு செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான T. J. .கோவிந்தராஜ தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கட்சி உறுப்பினர் சேர்க்கை, கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளைப் பற்றி விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டிருந்த பொழுது ஒருதரப்பினர் கூட்டத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்து தங்களுக்கு முறையான அழைப்புகள் வருவதில்லை எனக் குற்றம் சாட்டினர்.