திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இன்று திடீரென 100 அடி ஆழத்திற்கு கடல் உள்வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடு ஆகும்.இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோவிலில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்து சுவாமி தரிசனம் செய்பவர்கள் வழக்கம்.
இன்று விடுமுறை தினம் என்பதால் நாழிக்கிணறு மற்றும் கடற்கரையில் குடும்பம் குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் கடல் நீர் சுமார் 100 அடி மேல் உள்வாங்கியது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடலில் முக்கிய நாட்கள் ஆன அமாவாசை பௌர்ணமி அஷ்டமி நவமி ,நாட்களில் கடல் நீர் உள்வாங்குவது வழக்கம் இன்று கனத்த நாள் அல்லாத போதும் இன்று கடல் நீர் சுமார் 100அடி மேல் உள்வாங்கியது.
இதனால் கடலில் பாறைகள் மற்றும் கோயிலில் உள்ள பழுதான சிலைகள் கடலில் போடுவது வழக்கம் கடல்நீர் உள்வாங்கியதால் அந்த சிலைகளும் வெளியே தென்பட்டன.
கடல் நீர் உள்வாங்கியதை பொறுப்படுத்தாமல் பக்தர்கள் பாறையின் மீது ஏறி புகைப்படம் எடுத்து அங்குள்ள சிப்பிகளை எடுத்தும் ஆனந்தமாக கடலில் குளித்து விளையாடினர்.