தமிழக கல்வித்துறை வரலாறு குறித்த சபாநாயகர் அப்பாவுவின் கருத்துக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டணம் தெரிவித்துள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் ஒய் 20″மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் பங்கேற்று மாநாட்டை துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்,தொழில் துறையில் இந்தியா எப்படி முன்னேற வேண்டும் என்பதற்கான மாநாடு இது எனவும் பலத்துறைகளில் இந்தியா முன்னேறி வரும் நிலையில் ஜி 20 மாநாட்டை நடத்தி உலகிற்கு வழிகாட்டி வருகிறோம்.
எதற்கு தீர்வு காண வேண்டுமென்றாலும் இந்தியா மற்ற நாடுகளை எதிர்நோக்கி இருந்த சூழலில் மற்ற நாடுகளுக்கிய முடிவுகளுக்காக இந்தியாவை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் சந்திராயனுக்கு விண்கலத்தை அனுப்பிவிட்டோம்.
புதிய பாராளுமன்றத்தை கட்டி விட்டோம், 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது இவை அனைத்தும் பாரதப் பிரதமர் பிரதமரின் உறுதியான தலைமையின் கீழ் நிறைவேறி உள்ளது என்றும் பெருமிதம் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக கல்வித்துறை குறித்த சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவின் கருத்தை தான் வன்மையாக கண்டிக்கிறேன் எனவும் இதே கருத்தை இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்கள் சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா எனவும் கேள்வியெழுப்பியதுடன் ஒரு மதத்தை சார்ந்தவர்களை தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறார்கள். அது உதயநிதியாகட்டும் அப்பாவாகட்டும் அவர்களை கட்டுப்படுத்தவில்லை எனவும் சாடினார்.
சாதியை ஒழிப்பதற்கு சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி சொல்கிறார் ஆனால் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது போன்றவற்றை செய்கிறார்கள்., சமுதாய நலம் சார்ந்து நடக்க வேண்டிய பள்ளிகளில் மலம் சார்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்றால் சமுதாயம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை சிந்தித்து முதலில் நாம் அதை சரி செய்ய வேண்டும்.
ஆனால் அதை விடுத்து இந்தியாவில் எதுவும் சரியாக இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது தவறு என்றும் சுட்டிக்காட்டினார். சபாநாயகர் ஏற்கனவே இதுபோன்று பேசியிருக்கிறார் என்பதால் இவர் சொல்வது சரியா என்பதை சமுதாயத்திற்கே விட்டு விடுகிறேன் என தமிழிசை சௌந்திரராஜன் கடுமையாயக விமர்சித்தார்.