Tamilisai soundararajan rejoined BJP : தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வது என்பது எளிமையான முடிவு இல்லை. மிகவும் கடினமான முடிவை எடுத்துள்ளார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன். லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையும் படிங்க : மக்களவை தேர்தலையொட்டி UPSC தேர்வுகள் ஒத்திவைப்பு!
தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களிலும் ஆளுநராக பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளார்.
அதிகாரத்தை விட்டு விட்டு மக்கள் பணியாற்றுவதற்காக மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், முன்பை விட இன்னும் பரபரப்பாக அரசியலில் ஈடுபட எண்ணி களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் 25 ஆண்டுகளாக பாஜகவில் உறுப்பினராக இருந்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் தமிழிசை சௌந்தரராஜன்.
அதனைத் தொடர்ந்து தமிழிசை செளந்தரராஜனுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார் அண்ணாமலை Tamilisai soundararajan rejoined BJP.
பாஜகவில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் தன்னுடைய பழைய உறுப்பினர் எண்ணைப் பெற்றுக் கொண்டுள்ளார்
பாஜகவில் இணைந்த கையேடு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்,
” நான் மக்கள் பணியாற்றுவதற்காகவே அதிகார பதவியை விட்டு விட்டு மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளேன். ராஜ்பவனை விட்டு விட்டு கமலாலயம் வந்து பாஜகவில் இணைந்துள்ளேன்.
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வது என்று கஷ்டமான முடிவை எடுத்தாலும், அதனை இஷ்டப்பட்டு தான் எடுத்திருக்கிறேன்.
அந்த வகையில், தற்போது கமலாலயத்தில் மீண்டும் நுழைந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
என் தம்பியிடம் இருந்து அக்கா என்ற முறையில் பாஜக உறுப்பினர் அட்டையைப் பெற்று இருக்கிறேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க : மக்களவைத் தேர்தலின் அறிக்கை விரைவில் எதிர்பார்க்கலாம்: எடப்பாடி பழனிசாமி