மதுரையில், 11 வயதான வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தந்தை மற்றும் தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
child rape-மதுரை மாவட்டம் கூடல் புதூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி (மார்ச் 23 ஆம் தேதி) ஒருவர் தனது வீட்டின் கழிவறையில் மர்மமான முறையில் மயங்கி கிடந்துள்ளார்.சிறுமியை காணாமல் தேடிய அவருடைய உறவினர்கள், இறுதியில் அவர் கழிவறையில் மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்றுள்ளனர்.
அப்போது சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏறக்கனே இறந்ததுவிட்டார் என தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இந்த மரணம் சந்தேக வழக்காக பதிவு செய்யப்பட்டது.
மேலும் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கலாம் என்கின்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை தொடங்கியை நிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
அதன் முடிவுகள் தற்பொழுது வெளியான நிலையில் அதிர்ச்சி தரும் வகையில், அந்த 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்child rape செய்யப்பட்டு தான் உயிரிழந்திருக்கிறார் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் கைரேகை நிபுணர்களை வைத்து தற்பொழுது காவல்துறையினர் தேடுதல் வேட்டியை நடத்தி வரும் நிலையில் விரைவில் குற்றவாளி பிடிபடுவார் என்று மாவட்ட காவல் ஆய்வாளர் உறுதி அளித்திருக்கிறார். மேலும் சந்தேக வழக்காக இருந்த சிறுமியின் வழக்கு தற்பொழுது போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: ”அதே போன்ற மரணம்..” மதுரையிலும் ஒரு புதுச்சேரியா ?
காவல்துறையின் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்:
11 வயது சிறுமியின் தாய் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். தந்தை வேறு திருமணம் செய்து கொண்டதால், சிறுமி மற்றும் அவரது அண்ணன் இருவரும் வளர்ப்பு பெற்றோரான பெரியம்மா, பெரியப்பா பராமரிப்பில் வளர்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த, சில மாதங்களுக்கு முன்பாக சிறுமியின் அண்ணன் கண்மாயில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து சிறுமி மட்டும் தனது வளர்ப்பு பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மதுரை மாநகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இதையும் படிங்க : புதுச்சேரி சிறுமி விவகாரம் :“பெண்களை பாதுகாக்கத் தவறிய பா.ஜ.க.” -RS பாரதி கண்டனம்!
பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை:
கடந்த வியாழக்கிழமை மாலை சிறுமியுடன் வீட்டில் இருந்த வளர்ப்பு பெற்றோரான பெரியப்பா செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரையும் அழைத்துச்சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ராணுவ வீரராக இருந்தவரும் சிறுமியின் வளர்ப்புத் தந்தையுமான செந்தில்குமார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமாகியுள்ளது. அச்சமயத்தில் சிறுமி கத்தியதால் அவரது கழுத்தை நெரித்து இந்த வளர்ப்பு தந்தை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அச்சமயத்தில் அங்கு வந்த செந்தில்குமாரின் மனைவி சந்திரபாண்டி உயிரிழந்த மகளின் உடலைக் கழிவறைக்குள் போட்டுவிட்டு அருகில் உள்ளவர்களை அழைத்து நாடகமாடியதும் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ வழக்கின் கீழ் ராணுவ வீரரான செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சந்திரபாண்டி இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்