,Minister TM Anbarasan கடந்த முறை தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, “திமுக ஒரு ஊழல் கட்சி, அது சீக்கிரமே காணாமல் போகும்” எனக் கூறி இருந்தார். இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும், கருத்துக்களும் அரசியல் தளங்களில் பரிமாறப்பட்டுக் கொண்டு வந்த நிலையில், திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் தங்கள் எதிர் கருத்துக்களைக் கூறி வந்தனர்.
இது குறித்து அப்போது ஒரு பொதுக்கூட்ட மேடையில் பேசிய தமிழ்நாடு ஊரக தொழில்துறை அமைச்சரான தா.மோ.அன்பரசன், ‛‛எவ்வளவோ பிரதமரை நான் பார்த்துள்ளேன். ஆனால் இவ்வளவு மட்டமாக பேசிய பிரதமரை நான் பார்த்து இல்லை. திமுகவை ஒழிச்சிடுவேன் என்று சொல்கிறார். நான் ஒன்றை ஒன்றை சொல்லி கொள்கிறேன். திமுக என்பது சாதாரண இயக்கம் இல்லை.
இதையும் படிங்க: ஃபைல் அனுப்பிய முதல்வர்; பறந்து சென்ற கவர்னர்..! -பொன்முடிக்கு சிக்கல்
பல பேர் உயிர் தியாகம் செய்து வளர்ந்த இயக்கம். யார் யாரோ ஒழிஞ்சிவிடும் என கூறினார்கள். ஆனால் அவர்கள் தான் ஒழிந்துபோய்விட்டனர். இந்த இயக்கம் அப்படியே தான் உள்ளது. நான் அமைச்சர் என்பதால் அடக்கி வாசிக்கிறேன். இல்லாவிட்டால் பீஸ் பீஸாக ஆக்கிவிடுவேன்” என பேசியிருந்தார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பாஜகவின் தேசிய ஐ.டி. விங் பொறுப்பாளர் அமித் மால்வியா என்பவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்,(Minister TM Anbarasan) பேசிய வீடியோவையும் பகிர்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான சத்ய ரஞ்சன் ஸ்வைன் என்பவர் அது குறித்து டெல்லி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் அமைச்சர் அன்பரசன் பேசிய வீடியோவையும் இணைத்திருந்தார் ஸ்வைன்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1768148803696394359?s=20
அதை தொடர்ந்து அமைச்சர் அன்பரசன் மீது கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 153, 268, 503, 505, மற்றும் 506 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் நேற்று (14.04.2024) வழக்குப் பதிவு செய்துள்ளனர் டெல்லி காவல் துறையினர்.
தமிழக அமைச்சர் மீது டெல்லி காவல்தூறையினர் வழக்கு பதிந்துள்ள சம்பவம் திமுகவினரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.