தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிப்படைவோர் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதன் எதிரொலியால், தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவத்துறை நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 15-ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில் இன்று ஆலோசனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.