காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ( kailasanathar temple)நாளைய திருத்தேர் வீதி உலாவினை சட்டப்பேரவை தலைவர் செல்வம் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேர் பவனி வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திருத்தேர் வீதி உலாவின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவை தலைவர் செல்வம் கலந்து கொண்டு வடம் பிடித்து திருத்தேர் வீதி உலாவினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், துணை ஆட்சியர் ஜான்சன், மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் மற்றும் கோவில் அறங்காவல் குழுவினர் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்