சிதம்பரம் தீட்சிதர்கள் மீதான குழந்தை திருமண குற்றச்சாட்டில் சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை நடத்தவில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், ,சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை சோதனை உள்ளிட்ட சம்பவங்களை தொடர்பாக குற்றம்சாட்டி பேசியிருந்தார்.
இந்த நிலையில், தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக தமிழ்நாடு அரசுக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம், இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கைத் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில். தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தை திருமணம் நடந்ததாக புகார்கள் வந்த நிலையில், அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்த பின்னர், அதற்கான ஆதாரங்களை திரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், சிதம்பரம் டவுன் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8 ஆண்கள் , 3 பெண்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.மேலும் அந்த சிறுமிகள் தற்கொலைக்கு முயன்றனர் என்பது பொய்யான தகவல் என்றும், அது போன்ற நிகழ்ந்து நடந்ததாக தகவல் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 4 குழந்தைகளுக்கு திருமணங்கள் நடந்து இருந்தால் ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் தீட்சிதர் குடும்ப சிறுமிகளிடம் கன்னித்தன்மை பரிசோதனை தொடர்பாக ஆளுநர் ரவி குற்றம் சாட்டிய நிலையில் அது முழுக்க, முழுக்க பொய்யான குற்றச்சாட்டு என காவல்துறை தெரிவித்துள்ளது.