இந்தியாவில் அதிகமாக தற்கொலை செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாணவர்களில் தற்கொலைகளும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்திய அளவில் நடைபெறும் தற்கொலைகள் எண்ணிக்கை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பபட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டில் நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை என்ன? தற்கொலைகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எதாவது மேற்கொண்டுள்ளதா? என மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 1,53,052 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 19, 909 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
மேலும் மகாராஷ்டிராவுக்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் 16,883 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் டெல்லி உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களில் 4,315 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்’ எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.