12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் முதல் 3 இடம் பிடித்த மாவட்டங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை 3,324 மையங்களில் நடந்தது. இந்த நிலையில், இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை அறிவிப்பை வெளியிட்டது.
+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில், மாணவிகளில் 96.38% பேரும், மாணவர்களில் 91.45% பேரும் தேர்ச்சி என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்த நிலையில் 94.3% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.இந்த பொதுத்தேர்வை 4,398 மாற்றுத்திறனாளிகள் எழுதியிருந்தனர். இதில் 3,923 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல் 90 சிறைவாசிகள் தேர்வு எழுதியிருந்த நிலையில் அவர்களில் 79 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
மொத்த தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் முதல் 3 இடம் பிடித்த மாவட்டங்கள்:
12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் (97.85%) முதலிடம்
2ம் இடத்தில் திருப்பூர் (97.79%)
3ம் இடத்தில் பெரம்பலூர் ( 97.59%) உள்ளன
100 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை:
தமிழ் – 2 பேர்
ஆங்கிலம் – 15 பேர்
கணிதம் – 690 பேர்
இயற்பியல் – 812 பேர்
வேதியியல் – 3,909 பேர்
உயிரியல் – 1,494 பேர்
தாவரவியல் – 340 பேர்
விலங்கியல் – 154 பேர்
கணினி அறிவியல் – 4,618 பேர்