தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்த கொலைக்கு யார் காரணம் என்பதை குறித்து சக கிராம நிர்வாக ஊழியர் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ். இந்த நிலையில் அலுவலகத்தில் பணியாற்றிய பொழுது மர்ம நபர்கள் இரண்டு பேர் உள்ளே புகுந்து லூத் பிரான்சிஸை வெட்டி படுகொலை செய்தனர்.
பணியில் இருந்த பொழுது விஏஓ வெட்டி பழுக்கடை செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலையில் மறவன்மடம் விஏஓ பிரேமலதா பேசிய ஆடியோ ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது. அதில் லூர்து பிரான்சிஸ் ஏற்கனவே தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி ஆட்சியரிடம் பணியிட மாற்றம் வேண்டியும்,
ஆனால் அவருக்கு பணியிடை மாற்றம் மறுக்கப்பட்டதற்கு அவரது இறப்பிற்கு முழு காரணம் என தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக களியாவூர் பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். கோவில்பத் சுற்றுவட்டார பகுதிகளில் ஆற்று மணல் திருட்டு அதிகளவில் நடந்தது.
அதைத் தடுக்க லூர்து பிரான்சிஸ் எடுத்த கடும் நடவடிக்கையால் அவர் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.