போரூரில் தலைக்கவசம் அணியாமல் வந்த பிரபல யூடியூபர் சுந்தரவல்லி (Sundaravalli )போக்குவரத்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போரூர் போக்குவரத்து காவல்துறையினர் பூந்தமல்லி மவுண்ட் சாலையில் பூந்தமல்லி மேம்பாலம் அருகே வாகன சோதனை ஈடுபட்டன.அப்பொழுது தலைக்கவசம் அணியாமல் வந்திருந்தவர்களை மடக்கிப் பிடித்து அபராதம் விதித்துக்கொண்டிருந்தன.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சுந்தரவல்லியும் அவருடைய மகனும் தலைக்கவசம் அணியாமல் வந்ததால் அவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்க முயன்றனர்.
இந்த நிலையில், இருசக்கர வாகனத்தை ஓரம் கட்டும் பொழுது பணியிலிருந்த போக்குவரத்து காவலரின் காலில் முன் பக்க டயர் ஏறியதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து போலீசா இருக்கும் சுந்தரவல்லிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தனது மகனுடன் வந்த சுந்தரவல்லி தான் யார் என்று தெரியாதா என்றும், தன் மீது வழக்குப் போடுகிறாயா என்றும், நாளை செய்திகள் பாருங்கள் என்று ஆவேசமாகக் கூறிய அவர்,
உன்னால்தான் இந்த இடத்தில் நிற்கிறேன் என்று மகனை சரமாராகிய தாக்கிவிட்டு சாலை மறியல் ஈடுபடப் போவதாகச் சென்றார். அப்பொழுது அவரது மகன் சுந்தரவல்லி சமாதானப்படுத்தி சாலையிலிருந்து அப்புறப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து காயமடைந்த இரு போக்குவரத்து காவலர்கள், பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையை நேரத்தில் புகார் அளித்தனர்.
சமூக வலைத்தளத்தில் பிரபலமானவரான சுந்தரவல்லி தனது மகனுடன் தலைக்கவசம் அணியாமல் வந்து போக்குவரத்து காவல்துறை உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது