இயற்கைக்கு புறம்பாக மாடிஃபிகேஷன் கல்ச்சர் என்ற பெயரில் நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிட்ட டாட்டூ கடை உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் இயற்கைக்கு புறம்பாக Body Modification Culture என்ற பெயரில் கண்களுக்குள் பெயிண்டிங் செய்துகொள்வது, நாக்கை இரண்டாக கிழித்துக்கொள்வது, அதற்கு வர்ணம் தீட்டிக்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதுடன், பலருக்கு இதே போன்று body modification செய்த ஹரிகரன், ஜெயராமன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Also Read : மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி : சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி..!!
இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு Tattoo என்ற ஏலியன் தோற்றத்தை உருவாக்கி தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற நிலையில் போலீசார் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளனர் .
கைது செய்யப்பட்ட ஹரிஹரன் நடத்தி வந்த டாட்டூ சென்டருக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பேஷன் என்ற பெயரில் இன்றைய கால இளசுகள் செய்யும் அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லாமல் அனுமான் வால் போல் நீண்டு வருவது சற்று வேதனையை ஏற்படுத்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.