பஞ்சாப்பில் ஆசிரியர் (teacher arrested) ஒருவர் தனது செல்போனை பயன்படுத்தி பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது தவறுதலாக எல்.சி.டி. திரையில் ஆபாச வீடியோ ஒளிபரப்பான சம்பவம் அரங்கேறிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள கோபிந்த்புரா என்ற கிராமத்தில் அரசு பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், இங்கு ராஜீவ் குமார் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று ஆசிரியர் ராஜீவ் குமார் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு எல்.சி.டி. திரையில் தனது செல்போனை பயன்படுத்தி பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது, தவறுதலாக எல்.சி.டி. திரையில் ஆபாச வீடியோ ஒன்று ஒளிபரப்பானது.
இதனால் வகுப்பறையில் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து ராஜீவ் குமார் உடனடியாக அந்த வீடியோவை நிறுத்தினார். ஆனாலும், இந்த சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த செய்தி காட்டுத்தீ போல பரவியது.
அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், இந்த சம்பவம் குறித்து அவர்கள் அருகில் காவல் நிலையத்துக்கு சென்று, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி போராட்டம் நடத்தினர்.
அதனை தொடர்ந்து ராஜீவ் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்த (teacher arrested) காவல் துறையினர் இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.