இந்தியாவின் இரண்டாவது ஆப்பிள் ஸ்டோர் (apple store) டெல்லியின் சாகேட்டில் வியாழக்கிழமை திறக்கப்படும் எனவும் மும்பை BKC இல் முதல் கடை திறக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலக்ட் சிட்டி வாக் மாலில் அமைந்துள்ள இந்த ஸ்டோர், மும்பையில் உள்ள ஃபிளாக்ஷிப் ஸ்டோரைக் காட்டிலும் மிகச் சிறியதாக இருந்தாலும், எல்லா ஆப்பிள் தயாரிப்புகளையும் காட்சிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த கடையில் (apple store) 15 மொழிகள் பேசக்கூடிய 70 பணியாளர்கள் இருப்பார்கள் எனவும், இந்த ஊழியர்களில் பாதி பேர் பெண்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்கள் அனைவருக்கும் பயன்படும் விதமாக ஒரு ஸ்டோர் இருக்க வேண்டும் என்ற யோசனையின் அடிப்படையில் தான் இந்த ஸ்டோர் திறக்கப்பட உள்ளதாக ஆப்பிளின் சில்லறை விற்பனையின் மூத்த துணைத் தலைவர் டெய்ட்ரே ஓ’பிரைன் கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து பேசிய அவர் “எங்கள் குழு உறுப்பினர்கள் உள்ளூர் சமூகத்துடன் இணைவதற்கும், அவர்களைத் தொடர்ந்து அவர்களுக்கு உதவுவதற்கும் மற்றும் எங்கள் அற்புதமான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் பயனாளர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக தான் இந்த ஸ்டோர் திறக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், எங்களிடம் உள்ள அனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஆராய வாடிக்கையாளர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும், “எங்கள் குழு பயனர்களின் சந்தேகம் தொடர்பான கேள்விகளுக்கு ஏற்றவாறு அவர்களை வழி நடத்துவதற்கான பயிற்சித் திட்டம் மற்றும் ஆப்பிள் பிக்-அப் போன்ற சேவைகளைப் பகிர்ந்து கொள்ள முடியும்” என ஆப்பிளின் சில்லறை விற்பனைக்கான மூத்த இயக்குனர் வெண்டி பெக்மேன் கூறியுள்ளார்.