அமெரிக்காவில், தனது சகோதரியை மூன்று வயது தங்கை துப்பாக்கியால் சுட்டு (girl shoots) கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர்களது வீட்டிற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் சம்பவத்தன்று வந்திருந்தனர்.
இதனை எடுத்து உறவினர்களுடன் அமர்ந்து குழந்தைகளின் பெற்றோர் பேசிக் கொண்டிருந்தபோது, இரண்டு குழந்தைகளும் வேறு ஒரு அறையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது பெண் குழந்தை வீட்டில் கீழே கிடந்த துப்பாக்கியை எடுத்து விளையாடி உள்ளார். அதே நேரத்தில், திடீரென துப்பாக்கியில் இருந்து குண்டும் வெளிவந்துள்ளது (girl shoots).
இந்த சத்தத்தை கேட்டு மற்றொரு அறையில் இறந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்து அங்கு பார்த்த போது, நான்கு வயது பெண் குழந்தை குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இதனை அடுத்து, உடனடியாக அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதிலும், வழியிலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் தற்செயலாக நடந்ததாக சொல்லப்படும் நிலையில், இது தொடர்பாக ஏதேனும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து உறுதியான தகவலும் வெளியாகவில்லை.