அமெரிக்காவில், விமானம் தரையிறங்கிய போது இயங்கிக்கொண்டிருந்த விமானத்தின் எஞ்சினுக்குள் (engine) இழுக்கப்பட்டு விமான நிலைய ஊழியர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நேற்று இரவு 10.30 மணியளவில் டெக்சாஸ் மாகாணத்தின் சாண்டியாகோ நகருக்கு டெல்டா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது.
அப்போது, விமானம் சாண்டியாகோ விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விமான ஓடுதளத்தில் விமானம் மெல்ல சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில், தரையிறங்கிய விமானத்தின் ஒரு எஞ்சின் (engine) இயங்கிக்கொண்டிருந்தது.
அதே சமயம், விமானதின் அருகே விமான நிலைய ஊழியர் ஒருவர் வந்த நிலையில், இயங்கிக்கொண்டிருந்த விமானத்தின் ஒற்றை எஞ்சினுக்குள் திடீரென அந்த ஊழியர் இழுக்கப்பட்டார்.
விமான எஞ்சினில் இருந்து வந்த அதிக அழுத்தத்தினால் விமான எஞ்சினுக்குள் இழுத்துக்கொள்ளப்பட்ட ஊழியர் விமான எஞ்சினில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரின் உடலை கைப்பற்றி, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விமானத்தின் எஞ்சின் இயங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அதன் அருகே விமான ஊழியர் சென்றதால் எஞ்சின் அழுத்தத்தால் அதனுக்குள் இழுத்துக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் விமானப்போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.