தாய்லாந்து நாட்டிற்கு இந்தியர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் தற்போது இந்தியர்களுக்கு ‘இ-விசா’ வழங்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உலகில் இயற்கை எழில்கொஞ்சும் அதிக சுற்றுலா தளங்கள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் தாய்லாந்து நாடும் இடம்பெற்றுள்ளது . இயற்கையை சார்ந்து இங்குள்ள அழகிய இடங்கள் பார்ப்போர் கண்களை குளுமையாக்கும் . இதுமட்டுமின்றி இங்குள்ள கடற்கரைகளும் உலகளவில் பெயர்போனவை .
இதன்காரணமாகவே பல நாடுகளில் உள்ள மக்கள் தாய்லாந்துக்கு அதிகளவில் வருகை தருகின்றனர் அதிலும் குறிப்பாக தாய்லாந்திற்கு இந்தியர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர் . இவ்வாறு வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அந்நாட்டு அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
Also Read : நயன்தாரா ஆவணப்பட வழக்கு – விசாரணையை ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்..!!
அந்தவகையில் தாய்லாந்து நாட்டிற்கு இந்தியர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் தற்போது இந்தியர்களுக்கு ‘இ-விசா’ வழங்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஆன்லைன் இ-விசாவுடன் இந்தியர்கள் தாய்லாந்துக்கு செல்லும் வசதி அடுத்த மாதம் அறிமுகமாக உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது .
சுற்றுலா செல்வோர் 60 நாட்கள் விசா இன்றி தங்கும் வசதி தொடர்ந்து நீட்டிக்கப்படும் என்றும் தாய்லாந்துக்கு ‘இ-விசா’ பெற விரும்புவோர் thaievisa.go.th என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.