கலைஞரின் நூற்றாண்டு அடுத்தாண்டு கோவையில் நடைபெரும். அந்த கூட்டத்தை தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமை தாங்குவார்; பிரதமர் இருப்பார். 10க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து கலந்துக்கொள்வார்கள். அப்போது இந்தியாவிலையே மோடி, அமித்ஷாக்கள் இருக்க மாட்டார்கள் என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி தெரிவித்துள்ளார் .
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை என்ற பெயரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அத்துமீறியும் கைது நடவடிக்கையியில் ஈடுபட்டதை கண்டித்தும் இதற்கு ஊன்றுகோலாக செயல்பட்டதாக கூறி மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் கோவையில் நேற்று மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது .
இந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று அவர்களது கண்டனத்தை தெரிவித்தனர் .
பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி கூறியதாவது :

“கலைஞரின் நூற்றாண்டு அடுத்தாண்டு கோவையில் நடைபெரும். அந்த கூட்டத்தை தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமை தாங்குவார்; பிரதமர் இருப்பார். 10க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து கலந்துக்கொள்வார்கள். அப்போது இந்தியாவிலேயே மோடி, அமித்ஷாக்கள் இருக்க மாட்டார்கள் என ஆ.ராசா எம்.பி தெரிவித்துள்ளார் .
பொதுக்கூட்டத்தில் பேசிய வேல்முருகன் MLA கூறியதாவது :

அதிகாரத்தை கொண்டு அடக்க நினைத்தால் அடங்கி போக இது ஒன்றும் வடமாநிலம் அல்ல, இது தமிழ்நாடு. அதை அமித்ஷா உள்ளிட்ட அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். அண்ணாமலை கும்பல்கள், அமித்ஷா கும்பல்கள், வால்கள் ஒட்ட நறுக்கப்படும், அனைத்துக்கும் காலம் பதில் சொல்லும் என தெரிவித்துள்ளார் .