ராஜஸ்தானில் சிறுவன் ஒருவன் தனது பெற்றோரின் செல்போனை ஹேக் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு தம்பதியினர் தங்கள் செல்போன்களை யாரோ ஹேக் செய்துவிட்டதாகவும் வீட்டில் ப்ளூடூத் போன்ற சாதனங்களை வைப்பதாகவும் போலிஸில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த தம்பதியின் செல்போனை ஹேக் செய்தது அவரது 13 வயது மகன் என்பது தெரியவந்துள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணையில் இதை ஒரு ஹேக்கர் சொல்லி செய்ததாகவும், இல்லாவிட்டால் பெற்றோரை கொன்றுவிடுவதாக அந்த ஹேக்கர் மிரட்டல் விடுத்ததாகவும் அந்த சிறுவன் கூறியுள்ளார். பின்னர் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் பெற்றோரை பிராங் செய்வதற்காக இந்த செயலை அவர் செய்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
அந்த சிறுவன் தனது மாமாவின் செல்போனில் இருந்தே இது போன்ற செயலில் ஈடுபட்டதும், இதற்கு மாமாவும் உடந்தையாக இருந்துள்ளதும் தெரியவந்தது.
இது தொடர்பாக அந்த தம்பதி புகார் ஏதும் அளிக்காததால் ,போலிஸார் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பொது மக்களுக்கு இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர்.