தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரையில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் இன்று துவங்கியது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதுரை மாவட்டம் சார்பாக 2022 மற்றும் 20223 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகளளும் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் விளையாட்டு போட்டிகளை மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் திரு அணிஷ்சேகர் அவர்கள் தூங்கி வைத்தார்.
இன்று நடைபெற்ற போட்டியில் பள்ளி மாணவ மாணவியருக்கு 12 வயது முதல் 19 வயது வரையிலான உள்ள மாணவ, மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, வளைகோல் பந்து நீச்சல், கையேந்து பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெறும் நபர்களுக்கு மாவட்ட அளவில் தனி நபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 3000 ரூபாயில், இரண்டாவது பரிசாக 2000/ மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
மேலும் மாவட்ட அளவில் தனிநபர் போட்டிகளில் முதல் இடம் பெறுவதற்கு குழு போட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மாநில அளவிலான போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் ஐந்து பிரிவாக நடைபெறும் போட்டியில் இன்று பள்ளி மாணவிகளுக்கும்,
இதனை தொடர்ந்து,கல்லூரி மாணவ மாணவிகள் மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர்கள் மற்றும் பொது பிரிவு என ஐந்து பிரிவுகளாக நடைபெறும் போட்டிகளில் ஏராளமான கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்
முதல் நாள் நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சிம்ரன் சீத்சின்கா, மற்றும் மேயர் இந்திராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.