பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு 47 வருடம் கடுங்காவல் தண்டனை ( head master ) விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த முருகன் (54), 6 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கொடுக்கப்பட்டது .
Also Read : பிரதமரின் வெறுப்புப்பேச்சை ஒருபோதும் ஏற்கமுடியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின்பேரில் அவர் மீது வழக்கு பதிப்பட்டது. இந்நிலையில் நீண்ட வருடங்களாக நடைபெற்ற இந்த விசாரணையில் தலைமை ஆசிரியர் முருகன் குற்றவாளி என மாவட்ட போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு 2 ஆயுள், 47 ஆண்டுகள் கடுங்காவல் ( head master ) தண்டனை மற்றும் ₹69,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது