ரயில் தாக்குதல் நடத்தினால் நல்லது நடக்கும் என நம்பி ரயிலில் தீ வைத்ததாக குற்றவாளி (culprit) வாக்கு மூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் நடந்தது என்ன? விளக்குகிறது இந்த செய்த தொகுப்பு..
கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் சென்றுகொண்டிந்த ரயிலில் கடந்த 2-ம் தேதி வாலிபர் (culprit) ஒருவர் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
முதலில், தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் விசாரனையை தொடங்கிய போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் விட்டு சென்ற செல்போனை கைப்பற்றி அதன் IMEI எண்ணை வைத்து விசாரித்ததில் அது உத்திரபிரதே மாநிலத்தை சேர்ந்த ஷகரூப் ஷைபியுடையது என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து, உத்திரபிரதேசத்திற்கு விரைந்தனர் கேரள போலீசார்.
இந்த நிலையில், குற்றவாளியை மகாரஸ்டிராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் வைத்து பிடித்து விட்டதாக மகாரஸ்டிரா தீவிரவாத தடுப்பு போலீசாரிடம் இருந்து கேரளா போலிசாருக்கு வந்த அழைப்பை அடுத்து கேரள தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் மகாரஸ்டிரா விரைந்தனர்.
அங்கு கேரளா போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஷகரூப்பை, சாலை மார்க்கமாக கேரளாவுக்கு கொண்டு வந்த கேரள போலீஸ் விசாரணையை தொடங்கினர்.
ஏற்கனவே செல்வம் செழிக்க, பதவி உயர்வு கிடைக்க மூட நம்பிக்கையால் மாந்திரீகம் என்ற பெயரில் பறிக்கபட்ட உயிர்களை பார்த்து அதிர்ச்சியடைந்த கேரள போலிசாருக்கு குற்றவாளி ஷகரூப் கொடுத்த வாக்குமூலம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரயில் தாக்குதல் நடத்தினால் நல்லது நடக்கும் என கூறினார்கள். அதனால் 3 பாட்டில் பெட்ரோலுடன் ரெயிலில் பயணம் மேற்கொண்டேன் என கூறி வாக்கு மூலம் கொடுத்து போலீசாரையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார் ஷகரூப்.
மேலும், ஷகரூப்பிடம் மேற்கொள்ளபட்ட விசாணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பயணிகள் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து விட்டு எதுவுமே நடக்காதது போல 2 பெட்டிகள் தள்ளி அமர்ந்து அதே ரெயிலில் பயணித்த ஷகரூப், கண்ணூர் சென்று அங்கிருந்து மகாரஸ்டிரா மாநிலம் ரத்தினகிரிக்கு ரயிலில் பயணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு சென்று தப்பிச்செல்ல திட்டமிட்டது தெரியவந்துள்ளது. ஆனால், இரத்தினகிரி ரயில் நிலையத்தில் தவறி விழுந்த ஷகரூப்பை அங்கிருந்த உள்ளூர் வாசிகள் மருத்துவமனையில் அனுமத்துள்ளனர்.
இந்த நிலையில் தான் மருத்துவமனையில் இருந்த ஷகரூப் போலிசாரிடம் சிக்கயுள்ளார். முன்னதாக, ஷகரூப்பை காணவில்லை என அவரது குடும்பத்தினர் கடந்த மார்ச் மாதம் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில், இப்படி குடுமத்தினரிடம் கூட சொல்லாமல் நல்லது நடக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் மீது தீவைத்து 3 உயிர்களை கொன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.