ஆண்கள் மாடலில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், ஆண் விபச்சாரம் பற்றிய தகவல்களை கொண்டு படம் இராக்கதன் – இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் பேட்டி..
இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் இராக்கதன் படப்பிடிப்பு சென்னை, திருச்சி, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைப்பெற்றது. மேலும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேளாங்கண்ணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைப்பெற்றது.
திரைப்படத்தின் கதாநாயகனாக வம்சி கிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் பாஸ்கர் நடித்துள்ளனர்.
கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளனர். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக ரியாஸ்கான், நிழல்கள் ரவி, சஞ்சனா சிங், ஷாம்ஸ், இலக்கியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் பாடல்களை சைந்தவி, ஜி.வி பிரகாஷ் பாடியுள்ளனர். மேலும், படத்திற்கு மனாஸ்பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் குமார் இசை அமைத்துள்ளார். பாடல்களை பாபு கிருஷ்டியன் எழுதியுள்ளார். படத்தின் கலை இயக்குனராக இன்பபிரகாஷ், மக்கள் தொடர்பு தேஜா சண்டை பயிற்சி சரவணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். மருதம் புரொடக்சனுக்காக ராணி ஹென்றி சாமுவேலுடன் இணைந்து எம்.ஏ.ஜி.பாஸ்கர் தயாரித்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் கூறியது..
இந்த படம் பூஜை போட்டதும் அதிகமாக காட்சிகளை படம் பிடித்ததும் திருச்சியில் தான். ஆகையால் திருச்சி மாரிஸ் திரையரங்கில் இராக்கதன் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
மேலும் படம் கிரைம் மற்றும் த்ரில்லர் கதையாக உருவாகி உள்ளது. திரைப்பட கல்லூரி மாணவர்கள் இணைத்து பணியாற்றினர். அதே போன்று புதிய தொழில் நுட்பம் கொண்டு ஒளிப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த படம் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதாக தெரிகிறது. மேலும், இக்கதையில் முக்கியமாக ஆண்கள் மாடலிங் செய்வதும், அதில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், ஆண் விபச்சாரம் பற்றிய சில தகவல்களை கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். தொடர்ந்து படத்தின் வெற்றியைப் பொறுத்து இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்துள்ளேன். அதில் சில கதாபாத்திரங்கள் மாற்றப்படும் என்றார்.