ரவி மோகன் , நித்யா மேனன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான காதலிக்க நேரமில்லை படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன் . நித்தியா மேனன் நடிப்பில் உருவான திரைப்படமே ‘காதலிக்க நேரமில்லை’ , ஏராளமான திரைநட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்த இந்த படத்தில் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இப்படம் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . அதன்படி இப்படம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதியன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளதாக சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது .